விஸ்வகர்மா ஜெயந்தி விழா
செஞ்சி, : செஞ்சி வட்ட விஸ்வகர்மா தெய்வ வழிபாட்டு குழு சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு விஸ்வகர்மாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, என்.ஆர்., பேட்டை ஊராட்சி தலைவர் பிலால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.