உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையை ஆக்கிரமித்த புதர்கள் அகற்றப்படுமா?

சாலையை ஆக்கிரமித்த புதர்கள் அகற்றப்படுமா?

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையிலிருந்து பூதமங்கலம் கிராமத்திற்குச் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்துள்ள புதர்களை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவலுார்பேட்டையிலிருந்து வடுகப்பூண்டி வழியாக 4 கி.மீ., துாரம் வரை சென்றால் விழுப்புரம் மாவட்ட எல்லை முடிவடைகிறது. தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை துவங்கி 1 கி.மீ., துாரத்தில் பூதமங்கலம் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகனங்கள் சைடு வாங்கும் போது சாலை ஓரத்தில் இடமில்லாத நிலையில் சிரமத்திற்குள்ளாகின்றனர்.புதர்கள் நிறைந்திருப்பதால், இரவு நேரத்தில் இந்த சாலை வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துகள் ஏற்படுகிறது.பூதமங்கலம், ஆனந்தல், துர்க்கம், மன்சூராபாத், பாடகம், போளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அவலுார்பேட்டையில் நடக்கும் வாரசந்தைக்கும் மற்றும் பிற தேவைகளுக்காகவும் வரும் போது சாலையோர ஆக்கிரமிப்பு செடிகளால் அவதிப்படுகின்றனர்.கிராம மக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி