மேலும் செய்திகள்
மேலமடை பள்ளி அருகே ஆபத்தான மெகா பள்ளம்
29-Aug-2024
திண்டிவனம் : திண்டிவனம் எம்.டி.கிரேன் பள்ளி முன் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் நேரு வீதியில்எம்.டி.கிரேன் தொடக்க பள்ளி உள்ளது. பள்ளியின் நுழைவு வாயில் குப்புசாமி தெருவில் உள்ளது.மார்க்கெட் பகுதியான நேரு வீதியில் குப்பைக் கழிவுகள் பள்ளி அருகிலேயே கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்புசாமி தெருவில் சிறுநீர் கழிப்பவர்கள் ஒதுங்கும் இடமாக உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள், குப்பைகளை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Aug-2024