உள்ளூர் செய்திகள்

மகளிர் தின விழா

பெண்கள் கூட்டமைப்பு

திண்டிவனத்தில், நடந்த விழாவிற்கு, அமைப்பின் நிறுவனர் ராதிகா தலைமை தாங்கினார். லோகேஸ்வரி வரவேற்றார். காந்தரூபி, ராணி முன்னிலை வகித்தனர். திண்டிவனம் சமூக நல அலுவலர் அம்சவேணி, டாக்டர் அருண்சேஷாத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் பங்கேற்றனர். பூங்கொடி நன்றி கூறினார்.

சூர்யா கல்லுாரி

விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கேக் வெட்டி பெண் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கல்லுாரி முதல்வர்கள் சங்கர் பாலாஜி, வெங்கடேஷ், துணை முதல்வர்கள் ஜெகன், மோகன் வாழ்த்திப் பேசினர். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

அரசு கலைக்கல்லுாரி

வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் வரவேற்றார். முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசினார். அனைத்து பேராசிரியைகள், துாய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இணை பேராசிரியர் அருளமுதம் நன்றி கூறினார்.

வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கம்

மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஒ., முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மகளிர் தினத்தையொட்டி, மரக்கன்று நடப்பட்டது. தாசில்தார் தனலட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் கலெக்டர் தியான்சு நிகாம் மரக்கன்றுகளை நட்டு, பொது மக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். வி.ஏ.ஓ.,க்கள் காளிதாஸ், குமரவேல், நரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒன்றிய அலுவலகம்

செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். பெண் ஊழியர்கள் ஏ.பி.டி.ஓ., காஞ்சனா தலைமையில் கேக் வெட்டி, அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, சசிகலா, குமார் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

மயிலம் கலை அறிவியல் கல்லுாரி

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழாவில் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார். உதவி பேராசிரியர் லட்சுமி தேவி வரவேற்றார். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி உளவியல் துறை பேராசிரியர் ஜெனிபர் ஜாய்ஸ் சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை