உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை அம்மாள் கல்லுாரியில் மகளிர் தின விழா

தெய்வானை அம்மாள் கல்லுாரியில் மகளிர் தின விழா

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், மகளிர் தின விழா நடந்தது.கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். விருட்சம் சமூக இயக்க நிறுவனர் கவிமணி ராஜா நோக்கவுரையாற்றினார். கல்லுாரி பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். முதல்வர் அகிலா வாழ்த்தி பேசினார்.முதல் துளிர் சொசைட்டி தலைவர் வாசுகி ஸ்ரீராமமூர்த்தி, தேங்காய்த்திட்டு அரசு தொடக்க பள்ளி ஆசிரியை விஜயா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் கைத்தண்டலம் எழில்சோலை வனத்தின் நிறுவனர் மாசிலாமணி, புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க நிறுவனர் மோகன் பங்கேற்றனர்.புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் புல முதல்வர் இளமதி ஜானகிராமன், அறம் அறக்கட்டளை நிறுவனர் வலங்கைமான், தமிழ்ச் சங்க செயலாளர் மனோகரன் கருத்துரை வழங்கினர்.எழில் மாசிலாமணி, சூடாமணி, மணிமேகலை ஆகியோர் சாதனை பெண்மணி விருது பெற்றனர். தாகூர் அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி