மேலும் செய்திகள்
ரேஸ்கோர்ஸ் பகுதியில் சந்தன மரம் திருட்டு
30-Aug-2024
வானுார் : கிளியனுார் அருகே மரம் வெட்டும் போது, மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி இறந்தார்.மரக்காணம் அடுத்த ஆடவல்லிகூத்தான் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 50; மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை நல்லாவூர் வியாபாரிகள் மூலம், மொளசூர் காலனி சுடுகாடு அருகே ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான சவுக்கை தோப்பில், மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, நிலத்தையொட்டிச் சென்ற மின் கம்பியில் சவுக்கை மரம் காற்றில் சாயந்தது. இதை அறியாமல் மரம் வெட்டிய கோதண்டபாணி மீது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Aug-2024