மேலும் செய்திகள்
நாயை கொன்ற பரிதாபம் போலீஸ் விசாரணை
23-Feb-2025
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா மகன் இந்திரன், 24; இவர், 16 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், இந்திரன் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
23-Feb-2025