உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ்

விபத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ்

விழுப்புரம் : திருவெண்ணைநல்லுாரில் இருந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நோக்கி சென்றது.ஆம்புலன்சை விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் சிவக்குமார், 35; ஓட்டிச் சென்றார். விழுப்புரம் பைபாஸ் சாலையில், ஜானகிபுரத்தை கடந்தபோது, ஆம்புலன்சின் முன்பக்க டயரில் கம்பி குத்தியதால், பஞ்சராகி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டைக்குள் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் டிரைவர் சிவக்குமார் காயமடைந்தார். ஆம்புலன்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ