உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ.,வினர் 135 பேர் கைது

பா.ஜ.,வினர் 135 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகள் 135 பேர் கைது செய்யப்பட்டனர்.டாஸ்மாக் மதுபான ஆலை ஊழலை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு சென்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை அருகே மறியல் செய்த நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல், வளவனுாரில் 16, வெள்ளிமேடுபேட்டையில் 9, ஆரோவில்லில் 17, செஞ்சியில் 22, அவலுார்பேட்டையில் 14, வானுாரில் 10, ஆலம்பூண்டியில் 9 பேரும் கைதாகினர். மாவட்டத்தில் 10 இடங்களில் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ