உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நபார்டு நிதி ரூ.29 கோடியில் 172 குடிநீர் தேக்க தொட்டி

நபார்டு நிதி ரூ.29 கோடியில் 172 குடிநீர் தேக்க தொட்டி

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், நபார்டு நிதியுதவியுடன் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், ஜல் ஜீவன் திட்டத்தில் 29 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 2024-25ம் நிதியாண்டில் 144 ஊராட்சிகளில் 172 இடங்களில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டும் பணிகளை நிறைவேற்றிட திட்டமிடப்பட்டது. இதில், 144 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 நீர் தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி