/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் முதலிடம்; சிகா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் முதலிடம்; சிகா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
விக்கிரவாண்டி : தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக மாவட்ட அளவில் வாலிபாலில் முதலிடம் பெற்ற சிகா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் சிகா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவிளான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.மாணவர்களை தமிழ்நாடு வாலிபால் சங்க தலைவர், கல்லூரி சேர்மன் கவுதம சிகாமணி பாராட்டினார். இதில் சிகா பள்ளி முதல்வர் கோபால், வாலிபால் கழக மாநில இணைச் செயலாளர் மணி, கோலியனூர் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ராஜசேகர் உள்பட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவர்களை பாராட்டினர்.