மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
05-Jun-2025
திண்டிவனம்; மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் நேற்று காலை திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருவரும் 46 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் வேலுார், மூஞ்சூர்பட்டை சேர்ந்த நாதமணி, 42; திண்டிவனம் கீழ்பசாரை சேர்ந்த அரவிந்த், 30; எனத் தெரியவந்தது.புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
05-Jun-2025