மேலும் செய்திகள்
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
22-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலில் திருடிய 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கோணங்கிப்பாளையம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர், அங்கிருந்த 2 வெண்கல மணியினை திருடிக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், இருவரையும் பிடித்து, கோவில் கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற விழுப்புரம் தாலுகா போலீசார், சிறுவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்கள், அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து, இருவரையும் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
22-Nov-2024