மேலும் செய்திகள்
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
04-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்: அனுமதியின்றி மணல் கடத்திய இரு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, சிறுமதுரை தென்பெண்ணையாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்கள், போலீசாரை கண்டதும், வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். இதையெடுத்து போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த, இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
04-Jul-2025