உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்சசீலா பல்கலைக்கழகத்தில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம்

தட்சசீலா பல்கலைக்கழகத்தில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம்

விழுப்புரம் : திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலைக் கழகம் சார்பில், 'அறிவார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் கணிப்பொறி நுண்ணறிவில் முன்னேற்றங்களும், அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.பொறியியல் தொழில்நுட்ப அறிவியல் புலம் மற்றும் கணிப்பொறி அறிவியல் புலம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர்.அமைப்பாளர் சீத்தாராமன் வரவேற்றார். பதிவாளர் செந்தில் வாழ்த்தி பேசினார்.துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர், மலேசியாவின் பல்நோக்கு ஊடகவியல் பல்கலைக்கழக பேராசிரியர் எமர்சன் ராஜா, பெங்களூரு பேராசிரியர் ஆண்டிரியூஸ் சாம்ராஜ், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் எழிலரசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுடைநம்பி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் பல்வேறு உயராய்வு கல்வி நிறுவனங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், கணிப்பொறி சார்ந்த தலைப்புகளில் கட்டுரை சமர்ப்பித்தனர். சிறந்த 3 ஆய்வு கட்டுரைகளுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் இணைப்பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்பிரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, கலை அறிவியல் துறை டீன் தீபா, மருத்துவ புலங்களின் டீன் ஜெயஸ்ரீ உட்பட துறை தலைவர்கள் பங்கேற்றனர்.கணிப்பொறியியல் துறை பேராசிரியர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி