உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி 2 பேர் காயம்

மின்சாரம் தாக்கி 2 பேர் காயம்

விழுப்புரம், : மின் கம்பம் உடைந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில், 2 பேர் படுகாயம் அடைந்தனர்விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 52; இவரை, அதே பகுதியை சேர்ந்த அய்யனார், 38; என்பவர் தனது குத்தகை நிலத்தில் நேற்று கூலி வேலைக்கு அழைத்து சென்றார்.அங்கு தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியை அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய லைன்மேன் நடராஜன், 47; என்பவர் மின் கம்பத்தில் ஏறி சீரமைத்தார்.அப்போது, மின் கம்பம் உடைந்து மின்கம்பி ஆறுமுகம் மற்றும் அய்யனார் மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த ஆறுமுகம், அய்யனாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வளவனுார் போலீசார், அய்யனார் மற்றும் நடராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை