உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருவரைத் தாக்கிய 2 ரவுடிகள் கைது 

ஒருவரைத் தாக்கிய 2 ரவுடிகள் கைது 

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்றவரை குடிபோதையில் தாக்கிய ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் சேவியர் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 46; இவர், நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள பழைய சிந்தாமணி சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு குடிபோதையின் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் அபினேஷ் ரொசாரியோ, 21; பாக்கியராஜ் மகன் கோபிநாத், 20; ஆகியோர், அந்தோணிசாமியை வழிமறித்து, தகராறு செய்து, தாக்கினர். இதில், காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, ரவுடிகளான அபினேஷ் ரொசாரியோ, கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை