உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ள நிவாரணம் வழங்க கோரி 2 கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

வெள்ள நிவாரணம் வழங்க கோரி 2 கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

வானுார்; வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கொந்தமூர் மற்றும் அருவாப்பாக்கத்தில் பொது மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி 2,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கி வருகின்றனர்.நிவாரணம் கிடைக்காத அருவாப்பாக்கம் கிராம மக்கள் தங்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நேற்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதே போன்று பக்கத்து கிராமமான கொந்தமூர் கிராம மக்கள் மழை நிவாரணம் கேட்டு, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் காலை 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.இவ்விரு இடங்களிலும் போலீசார் மற்றும் தாசில்தார் நாராயணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்ததை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.அடுத்தடுத்து இரு கிராம மக்கள் நடத்திய சாலை மறியலால், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில், ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி