மொபைல்போன் பறிப்பு 2 வாலிபர்கள் கைது
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்து சென்றவரிடம், மொபைல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 46; இவர், நேற்று முன்தினம் இரவு, வடஆலப்பாக்கம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர், ஜெயபிரகாஷிடம் முகவரி விசாரித்தவர்கள், திடீரென ஜெயபிரகாஷ் கையில் வைத்திருந்த மொபைல்போனை பறித்து கொண்டு தப்பினர்.புகாரின் பேரில், டவுன் போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சலவாதி கிராமத்தைச் சேர்ந்த தம்பிராஜ், 29; விஸ்வநாதன், 30; ஆகிய இருவரும் மொபைல்போன் பறித்து சென்றது தெரியவந்தது.உடன், இருவரையும் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.