உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் சாகச புள்ளீங்கோவிடமிருந்து ஒரு மாதத்தில் 200 பைக்குகள் பறிமுதல்

பைக் சாகச புள்ளீங்கோவிடமிருந்து ஒரு மாதத்தில் 200 பைக்குகள் பறிமுதல்

வி ழுப்புரம் மாவட்டத்தில், இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், அதிவேக பைக்குகள் (ைஹ ஸ்பீடு) மீது தற்போதுள்ள இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், 1.50 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உள்ள விலை உயர்ந்த பைக்குகளை வாங்குகின்றனர்.இந்த பைக்கில் அதிவேகமாக சென்று சாகசத்தில் ஈடுபடுவதால் அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதுமட்டுமின்றி, மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. இந்த அதிவேக பைக்குகளால் ஏற்படும் விபத்தை தடுக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது, போலீசாரின் கவனம், ரேஸ் டிரைவிங் வாகன ஓட்டிகள் மீது திரும்பியுள்ளது. கடந்த சில தினங்களாக ரேஸ் டிரைவிங் வாகன ஓட்டிகள் மீது அஜாக்ரதையாகவும், அதிவேகமாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்லும் பிரிவின்கீழ் போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர். மேலும், பைக்குகளை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 ரேஸ் டிரைவ் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை