மேலும் செய்திகள்
நகர தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள்
04-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா நடந்தது.விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி முயற்சியில், கடந்த 2000ம் ஆண்டு, புறநகர் பகுதி விழுப்புரம் பூந்தோட்டம் ஏரியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த 9.6.2000 தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த புதிய பஸ் நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா நேற்று நடந்தது.தி.மு.க., நகர செயலாளர் சக்கரை வரவேற்றார். நகர சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, விசுவநாதன், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் பொன்முடி பங்கேற்று, நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதன் அவசியம் குறித்து பேசினார்.நகர பொருளாளர் இளங்கோ, நகர மன்ற துணை தலைவர் சித்திக்அலி, தொ.மு.ச. நிர்வாக பணியாளார் சங்க செயலாளர் மணி, மாவட்ட மாணவரணி ஸ்ரீவினோத், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, பாலாஜி, தொழிலாளர் அணி சுரேஷ்பாபு, வழக்கறிஞரணி காளிதாஸ், கவுன்சிலர்கள் சங்கர், மோகன்ராஜ், கோமதி பாஸ்கர், பத்மநாபன் உள்ளிட்ட கட்சியினர், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
04-Jun-2025