உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி ஒன்றிய கூட்டத்தில் ரூ.28 லட்சம் பணிகள் தேர்வு

செஞ்சி ஒன்றிய கூட்டத்தில் ரூ.28 லட்சம் பணிகள் தேர்வு

செஞ்சி : செஞ்சியில் ஒன்றிய கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, சேர்மன் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், டிலைட், துரை, சீனுவாசன், முரளி, பூங்காவனம், மல்லிகா, பனிமலர், ஞானாம்பாள், உமாமகேஸ்வரி, புவனா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சிங்கவரம், ரெட்டிப்பாளையம், நரசிங்கராயன் பேட்டை, தச்சம்பட்டு தடாகம் ஊராட்சிகளில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்தல். சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ