உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னியூர் கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 9ம் தேதி இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது.அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் அசோகன் செய்திக்குறிப்பு: வரும் 9ம் தேதி இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தரவரிசை மதிப்பெண் 320 முதல் 220 வரை உள்ள மாணவ, மாணவிகள் உரிய சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ