உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெங்களூரில் இருந்து குட்கா கடத்தல் 3 பேர் கைது: 177 கிலோ பறிமுதல்

பெங்களூரில் இருந்து குட்கா கடத்தல் 3 பேர் கைது: 177 கிலோ பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார்: பெங்களூரில் இருந்து திருவெண்ணெய்நல்லுாருக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 177 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுாருருக்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத னைத் தொடர்ந்து நேற்று அதிகாலை திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார், டி.கொளத்து ார்-பூசாரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கண்ணதாசன்,29; அண்டராயநல்லுார் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் சங்கர்,48; மற்றும் எம். குன்னத்துார் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன், 46; என்பது தெரிய வந்தது. மூன்று பேரை கைது செய்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், 177 கிலோ எடை கொண்ட குட்கா, சரக்கு வாகனம் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !