மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
08-Mar-2025
மயிலம் : மயிலம் அருகே புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் மயிலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 88 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், மானுார், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம், 42; என்பதும், சென்னையைச் சேர்ந்த 2 பேர் கூட்டேரிப்பட்டில் காரில் காத்திருப்பதாகவும் ஆட்டோவில் மது பாட்டில்களை எடுத்து வந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.போலீசார் ஆட்டோ டிரைவரை அழைத்துச் சென்று, கூட்டேரிப்பட்டில் காருடன் நின்றிருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபரியும் திருச்செந்துார் மாவட்டம், நாசரேத் கிராமத்தைச் சேர்ந்த விங்ஸ்லி அதனேசியஸ், 40; சென்னை, மாங்காடு, மீனாட்சி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 40; ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில், புதுச்சேரியில் மது பாட்டில்கள் வாங்கி ஆட்டோவில் ஏற்றி விட்டு காரில் காத்திருந்ததாக தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து செல்வம், சதீஷ்குமார், விங்ஸ்லி அதனேசியஸ் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 88 மது பாட்டில்கள் ஆட்டோ மற்றும் ேஹாண்டா சிட்டி காரையும் பறிமுதல் செய்தனர்.
08-Mar-2025