சூதாடிய 3 பேர் கைது
கோட்டக்குப்பம்: பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் அடுத்த தந்திரயான்குப்பம், இந்திரா நகர் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பழைய பட்டினப்பாதையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது இந்திரா நகர் பழைய பட்டினப்பாதை தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய சோதனைக்குப்பம் செந்தில், 42; புதுச்சேரி, சின்ன காலாப்பட்டு சக்தி முருகன், 33; இந்திரா நகர் பழைய பட்டினப்பாதை முஜிபுர் ரஹ்மான், 44; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.