மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
10-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் வழுதரெட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் விஜய், 20; ரமேஷ் மகன் ராகவ், 18; ஆகியோர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விஜய் மற்றும் ராகவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெரிய காலனியை சேர்ந்த விஷால் என்பவரை தேடிவருகின்றனர். இதேபோன்று, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, கெங்கராம்பாளையம் தனியார் கல்லுாரி எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தார். அதில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் மகன் கோகுல்ராஜ், 18; என்பவர், 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோகுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.
10-Sep-2025