உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டியிடம் 3 சவரன் அபேஸ்

மூதாட்டியிடம் 3 சவரன் அபேஸ்

விழுப்புரம் : மூதாட்டியிடம் நுாதன முறையில் 3 சவரன் நகை திருடி சென்ற மர்ம நபரைபோலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த சாலை அகரத்தை சேர்ந்தவர் காசிநாதன் மனைவி முத்தம்மாள், 70; இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்தார். அவர், ரேஷன் கடையில் பொருள் வாங்கி கொடுப்பதாக கூறி, 500 ரூபாயை பணம் வாங்கினார். பின், லோன் வாங்கித்தருவதாக கூறி, நகைகளை போட்டோ எடுக்க வேண்டும் என கூறினார். இதை நம்பி முத்தம்மாள் பீரோவை திறந்து நகைகளை காண்பித்தார். அப்போது, போட்டோ எடுத்த மர்ம நபர், அடுத்த சில நொடிகளில், 3 சவரன் நகையை திருடி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி