உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூழாங்கற்கள் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

விழுப்புரம் : கூழாங்கற்கள் கடத்திய மூன்று லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று பிடாகம், கண்டமானடி பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியாக வந்த 3 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் வழி மறித்த உடன், லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர். அதிகாரிகள், லாரிகளை சோதனையிட்டதில் கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.இதையடுத்து அதிகாரிகள், லாரிகளை பறிமுதல் செய்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

மணல் கடத்தல்

விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தபோது வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில், ஆற்று மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரான சாலாமேட்டை சேர்ந்த வசந்தகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை