மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது
வானுார் :புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் கொந்தமூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனை நடத்தினர். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய சோதனையில், 60 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.விசாரணையில், செஞ்சி அடுத்த அப்பம்பட்டு சுப்ரமணி மகன் பசுபதி, 25; பரணிகுமார் மகன் சதிஷ்குமார், 22; இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி செல்வது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த வாகன தணிக்கையின் போது, திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் ராம்குமார், 31; அருள் மகன் சுந்தர், 29; ஆகிய இருவரும் பைக்கில், மதுபாட்டில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து, 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.