உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

வானுார் : கிளியனுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் அடுத்த எறையனுார் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சரோஜா, 38; இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 9ம் தேதி இரவு 16 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய், வீட்டு பத்திரங்கள் கொள்ளை போனது.இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சிலரை பிடித்து விசாரித்தனர்.அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை சேர்ந்த முருகன், 37; சிவா, 30; நல்லாத்தூர் பொத்த மூக்கு (எ) மணிகண்டன், 29; சின்னசேலம் பிரகாஷ், 27; சென்னை, பெரிய பாளையம் சரவணன், 25; ஆகியோர் கூட்டாக சேர்ந்து, சரோஜா வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும், ஜாமினில் வெளியே வரும் இவர்கள், தொடர்ந்து திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.விசாரணைக்குப் பின், 5 பேரையும் கைது செய்து, 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 08:18

அந்த குடும்ப கட்சியில் சேர்ந்துடுங்க பொத்தமூக்கு உங்களுக்கு அரசு ஆதரவு கொடுக்கும் இல்லை வாரியம் அமைத்திடுங்க ஊரையே வளைத்து போட்டுவிடலாம்


Mani . V
மார் 30, 2025 07:37

பைத்தியன்காரனுங்க. அரசியலில் சேர்ந்தால் சுளுவாக கொள்ளையடிக்கலாம் என்பது தெரியாத பரிதாபத்துக்கு உரியவர்கள்.


முக்கிய வீடியோ