மேலும் செய்திகள்
கல்லுாரி பஸ்- வேன் மோதல் மாணவர்கள் தப்பினர்
25-Jul-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைபாஸ் சாலையில், மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இவ்விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததில், ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த பாரஸ்,30; என்பவர் நே ற்று காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் அருகே பைபாஸ் சாலையில் மாலை 3:30 மணியளவில் சென்றபோது, செஞ்சி சர்வீஸ் சாலையில் இருந்து பைபாஸ் சாலைக்கு டேங்கர் லாரி ஒன்று திடீரென திரும்பியது. இதை சற்றும் எதிர்பாராத பாரஸ், திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தினார். அப்போது, அந்த காருக்கு பின்னால், திருச்சி மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்த சரண்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மற்றும் அதற்கு பின்னால் ராமநாதபுரம், கீழக்கரையை சேர்ந்த முரளி மாணிக்கம்,43; என்பவர் ஓட்டிவந்த டாடா பஞ்ச் கார் (டிஎன் 65- ஏஆர் 7753) ஆகிய மூன்று கார்களும் அடுத்தடுத்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கடைசியாக மோதிய முரளிமாணிக்கம் காரின் முன்புறம் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த முரளிமாணிக்கம் அவரது குடும்பத்தார் முரளி,33; முனிஷ்வரி,30; பிரஹரிஷ்,25; தர்ஷித் அபிமன்யு,5; ஆகியோர் காரை விட்டு இறங்கினர். பின்னர், கார் மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது . தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், டாடா பஞ்ச் கார் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது. இ தன் மதிப்பு ரூ. 5 லட்சம். இந்த விபத்தில் கார்களில் பயணித்த அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தையொட்டி, விழுப்புரம் - சென்னை பைபாசில் மாலை 3:30 மணி முதல் 4:10 வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். விழுப்புரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வசந்த் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Jul-2025