உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசாணை நகலை எரித்த 50 பேர் கைது

அரசாணை நகலை எரித்த 50 பேர் கைது

விழுப்புரம், ஏப். 2-தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை எதிர்த்து, சாலை பணியாளர் சங்கத்தினர், விழுப்புரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த மண்டல அளவிலான போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், பைரவன், ஜெயராமன், ஜோசப், ராஜா தலைமை தாங்கினர்.துணைத் தலைவர் முத்து துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். விழுப்புரம், பெரம்பலுார், கடலுார், அரியலுார் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.போராட்டத்தில், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை எதிர்த்தும், மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச்சாவடி அமைத்து, கார்ப்பரேட் கம்பெனி சுங்கவரி வசூல் செய்வதை கண்டிப்பது.நெடுஞ்சாலைத்துறையில் 500 பணியிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்தின் போது, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை நகலுக்கு தீ வைக்க முயன்ற 50 பேரை, போலீசார் கைது செய்தனர். அனைவரையும் மாலை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை