த.வெ.க., மாநாடு சிறக்க 508 பால்குடம் ஊர்வலம்
வானுார் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, இடைஞ்சாவடி கிராமத்தில் 508 பால்குடம் ஊர்வலம் நடந்தது.நடிகர் விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது.இந்த மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கவும், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டியும், வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் கட்சி சார்பில், வர்ணமுத்து மாரியம்மன் கோவிலுக்கு, 508 பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால்அபிேஷகம் செய்து வழிப்பட்டனர்.நிகழ்ச்சிக்கு த.வெ.க., நிர்வாகி அய்யப்பன் தலைமை தாங்கினார். கட்சியைச் சேர்ந்த சுகுமார், ரவி, மகேஷ், பி.அய்யப்பன், ஜெகன், மோகன்ராஜ், ராஜசேகர், சுந்தர், சண்முகம், குமார், பவா, முருகன், சூர்யா, ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.