மக்கள் குறைதீர் கூட்டம் 60 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 60 மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கூட்டத்தில், கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய காலத்திற்குள் விசாரித்து தீர்வு காண அறிவுறுத்தினார்.முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 60 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.57,231 மதிப்பீட்டில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை கலெக்டர் பழனி வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) யோகஜோதி, நிலம் சிவக்கொழுந்து உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.