மேலும் செய்திகள்
மிதக்கும் வட மாவட்டங்கள், வெள்ளக்காடாக மாறியது
03-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பில் சிக்கியதில் 7 பேர் இறந்தனர்.விழுப்புரம் அடுத்த தொந்திரெ ட்டிப்பாளை யத்தை சே ர்ந்தவர் சிவக்குமார், 54; இவர், நேற்று அங்குள்ள ஓடை வாய்க்காலை கடந்து செல்ல முற்பட்டபோது, வெள்ளத்தில் அடித்த்துச்செல்லப்பட்டு இறந்தார். விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சக்திவேல், 50; டாஸ்மாக் கடை ஊழியர். இவர், நே ற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வந்தபோது, தும்பூர் பகுதியில் ஏரி நீர்வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தார்.விழுப்புரம் அடுத்த பனமலைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்,63; இவர், தனது மனைவி பத்மாவதியுடன், நேற்று முன்தினம் பைக்கில் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, மீண்டும் அங்கிருந்து பனமலைப்பேட்டை நோக்கி வந்தனர். இவர்கள், விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தை ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது, கனமழை வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டதில், மனோகரன் இறந்தார்.திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுவானூர் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார்,38; கூலித்தொழிலாளி. இவர், வீரங்கிபுரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் கருமாதி நிகழ்வுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து கண்டாச்சிபுரம் கால்நடை மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஓடையட கடந்தபோது வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தார்.விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி கிருஷ்ணவேணி,75; இவர், அதே கிராமத்தில் நூலக கட்டிடம் அருகே நடந்து சென்றபோது, அப்போது பெய்த கனமழையில் வெள்ளநீரில் மூழ்கி இறந்தார்.விழுப்புரம் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆழ்வார் மனைவி நாகம்மாள்,75; இவர், நேற்று தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மழை வெள்ளம் சூழ்ந்ததில், வெளியே வரமுடியாமல் வெள்ளநீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் அடுத்த டி.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மனைவி குப்பு,67; கனமழையால், இவரது வீட்டை சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததில், நீரில் மூழ்கி இறந்தார்.இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Dec-2024