உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் கல்லுாரி மினி பஸ் மீது கார் மோதியதில் 7 பேர் படுகாயம்

தனியார் கல்லுாரி மினி பஸ் மீது கார் மோதியதில் 7 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தனியார் கல்லுாரி மினி பஸ் மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். திண்டிவனம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லுாரிக்கு சொந்தமான மினி பஸ் நேற்று மாலை 3:30 மணியளவில், திண்டிவனம் - சென்னை சாலையில் சாரம் கூட்ரோட்டில் யு டர்ன் எடுத்து போது, சென்னையிலிருந்த திண்டுக்கல் நோக்கிச் சென்ற கொண்டிருந்த எம்.ஜி.ஆஸ்டர் கார் மினி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த, பேபி செல்வி, 19; கிரன்கர்கட்டா, 28; சகாயமினி, 26; சூர்யா, 25; சகாயமேரி, 32; ஜோஸ்பினா, 27; மற்றும் காரில் வந்த சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தமிழழகன் மனைவி ரூபா, 44; ஆகிய 7 பேர் காயமடைந்தனர். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்தில் சிக்கிய மினி பஸ் சாலையில் கவிழ்ந்ததால், திண்டிவனம் - சென்னை சாலையில் 4:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது. ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து, மினி பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி