உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.வெ.க., மாநாடு திடலில் 700 கண்காணிப்பு கேமராக்கள்

த.வெ.க., மாநாடு திடலில் 700 கண்காணிப்பு கேமராக்கள்

விக்கிரவாண்டி: நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை என்ற இடத்தில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர், விஜய் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர். அரசியல் அனுபவமிக்கவர்கள், விஜய் கட்சி ஆதர வாளர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.மாநாடு பணிகள் துவங்கிய முதல் வாரத்தில், ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் மாநாட்டு திடலினை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.மாநாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், துபாய் , பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள், மாநாட்டு திடலில் இரு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு திடல் முழுதும் 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மாநாட்டு மேடை அலங்கரிக்கும் பணியை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு உள் வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநாட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காரைக்கால், அக். 22-

சிறப்பு பூஜை

தமிழக வெற்றிக் கழக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, சனீஸ்வரர் கோவிலில், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். இதில், திருநள்ளாறு தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நசீர் தலைமையில், மாநாடு பத்திரிகை வைத்து, தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ