உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொலை செய்ய திட்டம் 8 பேர் கைது

கொலை செய்ய திட்டம் 8 பேர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் எஸ்.பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார், நேற்று முன்தினம் இரவு வாணியர் வீதியில் கும்பலாக இருந்தவர்களை பிடித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள், மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன்,30; கோலியனுாரை சேர்ந்த திலகர், 22; அகிலேந்திரன்,27; தவமணி, 20; கவுதம், 22; கோகுலகிருஷ்ணன், 23; அருண்குமார், 24; வளவனுார் பனங்குப்பத்தை சேர்ந்த மாதேஸ்வரன்,25; என தெரியவந்தது. மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன், கோலியனுாரை சேர்ந்த பச்சையப்பன் என்பவரை விழுப்புரத்தை சேர்ந்த சம்சுதீன் மகன் பயாஸ் என்பவர் அடித்ததாகவும், பச்சையப்பனுக்கு ஆதரவாக, விழுப்புரம் ஊரல் கரைமேட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் பயாசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக விக்கிரவாண்டியை சேர்ந்த கைப்பிள்ளை என்கிற வரதராஜ் என்பவர் தலைமையில் பயாசை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார், 9 பேர் மீது வழக்கு பதிந்து, 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. தலைமறைவாக உள்ள வரதராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை