ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு பதிவு
செஞ்சி: ஊராட்சி தலைவரை திட்டிய பெண் துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.வல்லம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் சங்கீதா, 40; ஊராட்சி தலைவர். இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா, 50; ஊராட்சி துணை தலைவர், இவரது கணவர் குணசேகர், 55; வார்டு உறுப்பினர் சுதா. இவரது கணவர் சரவணன், 40.இவர்கள் 4 பேரும், தன்னை தலைவர் பணியை செய்ய விடாமல் பிரச்னை செய்து, திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாக செஞ்சி போலீசில் சங்கீதா புகார் அளித்தார்.அதன் பேரில், போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், துணைத் தலைவர் சித்ரா உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.