விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு மாஜி எம்.பி., முதலுதவி சிகிச்சை
விழுப்புரம் : விழுப்புரத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர், நேற்று தனது மனைவி சரண்யாவுடன் பைக்கில் கெங்கராம்பாளையம் வழியாக புதுச்சேரி சென்றார்.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே குடுமியாங்குப்பம் பைபாஸ் மேம்பாலத்தில் மதியம் 12:00 மணிக்கு சென்றபோது பைக் மீது கார் மோதியது. கீழே விழுந்த சரண்யா காயமடைந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, விபத்தில் காய மடைந்து மயங்கிய சரண்யாவிற்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்சை வரவழைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.பின், மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சை விரைவாக துவங்க அறிவுறுத்தினார்.