உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் சாதனை 18 பேர் மாநில போட்டியில் பங்கேற்பு

வி.ஆர்.பி., பள்ளி மாணவர்கள் சாதனை 18 பேர் மாநில போட்டியில் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி மாணவ, மாணவிகள் 18 பேர் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தனர். விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தனர். கராத்தே போட்டியில், கீர்த்திவாசன் இன்டர்நேஷனல் போட்டியிலும், மாணவர்கள் ஸ்ரீராம், இமயவன், ஹரிகரன் மாநில போட்டியிலும் பங்கேற்று சாதனை படைத்தனர்.மாணவர்கள் சபரீஷ், ஸ்ரீராம், தாமரைசெல்வி, மதுஸ்ரீ, புவனேஷ் ஆகியோர் மாவட்ட கராத்தே போட்டியில் பரிசு பெற்றுள்ளனர். சிலம்ப போட்டியில் ஜி.ரோகித், சாந்தகுமார், தேவிகா, கே.ரோகித், பிரவீன், அஸ்வின், ஜெய் ஆகாஷ், தருண்ராஜ் ஆகியோர் மாநில அளவிலும், கார்த்திக் ராஜா, விகாஷ், தீபிகா, ஜெய்ஆகாஷ், நித்யபிரியா, யோகேஸ்வரன், ஆகியோர் மாவட்ட அளவிலும் பரிசு பெற்றுள்ளனர்.மல்லர் கம்ப போட்டியில், மனோஜ், ஏழிசை பொழிலன், சிந்துஜா, மனிதர்ஷன், சிவராஜ், மணியரசு ஆகியோர் மாநில அளவிலும், கிரிஷ்வரன், அரசன், மகாலஷ்மி ஆகியோர் மாவட்ட அளவிலும் பரிசு பெற்றுள்ளனர்.மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சோழன் பாராட்டு தெரிவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ