உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் மோதி வாலிபர் பலி ஹெட்செட் பாடலில் மூழ்கியதால் விபரீதம்

ரயில் மோதி வாலிபர் பலி ஹெட்செட் பாடலில் மூழ்கியதால் விபரீதம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் பரணி,20; விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, இந்திரா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.நேற்று காலை 8.00 மணிக்கு, அருகே உள்ள விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதை ஓரம் ஹெட் செட் அணிந்து மொபைல்போனில் பாடல் கேட்டபடி இயற்கை உபாதை கழித்தார். அப்போது, காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதியதில் பரணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ரயில் 15 நிமிடம் தாமதத்திற்கு பிறகு விழுப்புரம் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை