சொத்து தகராறில் தம்பதி கொலை செஞ்சி அருகே வாலிபர் கைது
செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ், 80; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி செலின்மேரி, 76. மரியதாசின் சகோதரி பெரியநாயகி, 83, திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமத்தில் வசித்து வருகிறார்.மரியதாசுக்கும், பெரியநாயகிக்கும் திருவம்பட்டில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி பெரியநாயகியின் கணவர் சவரிமுத்து இறந்ததையடுத்து, அவரது உடலை திருவம்பட்டில் உள்ள பிரச்னைக்குரிய நிலத்தில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து, செஞ்சி போலீசில் மரியதாஸ் புகார் அளித்தார்.மாலை 3:00 மணிக்கு, மரியதாசும், செலின்மேரியும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பெரியநாயகியின் மகள் வழி பேரன் அபிஷேக் ஆவின் ராஜ், 25, என்பவர், மரியதாசையும், செலின் மேரியையும் சம்மட்டியால் அடித்து கொலை செய்தார்.தகவலின்படி, செஞ்சி இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அபிஷேக் ஆவின் ராஜை கைது செய்தனர்.