மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்
03-Aug-2025
மயிலம் : செண்டூரில் ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் தொண்டி ஆறு பாய்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் 1 ம் தேதியன்று மயிலம் மலைக் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி விழாவிற்கு செல்வது வழக்கம். தொண்டியாற்றங்கரையில் உள்ள இலுப்பை தோப்பில் இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றங்கரை வனப்பகுதியில் வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இதையொட்டி, இந்தாண்டு நேற்று நடந்த விழாவில் அருகில் நெடி, பாலப்பட்டு, மோழியனூர், செண்டூர் , விளங்கபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தீர்த்தவாரிக்கு பின், சுவாமி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கிராமத்தில் சுவாமி வீதி நடந்தது. இரவு வீதி உலா காட்சி முடிந்த உடன், சுவாமியை மயிலம் கோவிலுக்கு அழைத்து சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் மற்றும் கிராம மக்கள் மேற்கொண்டனர்.
03-Aug-2025