உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் கம்பம் பிரச்னைக்கு நடவடிக்கை

மின் கம்பம் பிரச்னைக்கு நடவடிக்கை

விழுப்புரம்; விழுப்புரத்தில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையின்போது, மின் கம்ப பிரச்னைக்கு முன்னாள் சேர்மன் ஜனகராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சர்வேஸ்வரன் தெருவில் முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அப்போது அங்குள்ள இரண்டு வீடுகளையொட்டி, மின் கம்பங்கள் இருப்பதை மாற்ற, வீட்டின் உரிமையாளர்கள் ஜனகராஜியிடம் கூறினர்.இதையடுத்து அவர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார். மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, மின்கம்பம் இடமாற்றம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அதற்கான தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், விரைந்து பிரச்னையை தீர்க்க, ஜனகராஜ் வலியுறுத்தினார். அப்போது நகராட்சி கவுன்சிலர் மகாலட்சுமி, வார்டு செயலாளர் வைத்தியாநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை