உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு  

வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு  

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பகுதியில் நடக்கும் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் ஆய்வு மேற்கொண்டார். சாத்தாம்பாடி, சொக்கனந்தல் கிராம ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் மற்றும் சாத்தாம்பாடியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகள் தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் சரவணகுமார், ஏகாம்பரம், ஒன்றிய பொறியாளர்கள் அமர்நாத், முருகானந்தம், உமாசங்கரி, ஊராட்சி தலைவர் சுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை