உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில், அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.மந்தக்கரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., வரவேற்றார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் துவக்க உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் பாலு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச் செல்வன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி தலைவர் குமரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், ராமதாஸ், கண்ணன், ராஜா, கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை