உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்காதீர்கள் திருநங்கைகளுக்கு ஏ.டி.எஸ்.பி., அறிவுரை

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்காதீர்கள் திருநங்கைகளுக்கு ஏ.டி.எஸ்.பி., அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில், திருநங்கைகள் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விழுப்புரம் ரயில்வே மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் குணசேகர் வரவேற்றார். விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ராமர் சுடலை, மோகனசுந்தரி, நவீன்குமார் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் கூடுதல் எஸ்.பி., தினகரன் பேசுகையில், 'திருநங்கைகளுக்கு அரசு ஏராளமான சலுகை வழங்குகிறது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு நல்ல வழியில் முன்னேற வேண்டும். அதற்கான உதவிகளையும் காவல் துறையினர் மேற்கொள்வார்கள். பொதுமக்கள் உங்களை கடவுளாக மதிக்கிறார்கள். அந்த மரியாதையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். ரயில்களில் பயணிக்கும்போது, ஒருபோதும் பயணிகளிடம் அத்துமீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டோர் கைதானதால், தண்டனை பெற்று பாதித்துள்ளனர். அதுபோன்ற நிலைக்கு நீங்கள் செல்லக்கூடாது. ரயில்களில் யாசகம் கேட்போர், பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. ரிசர்வேஷன் பெட்டியில் ஏறக்கூடாது. ஒரு சிலர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த திருநங்கை சமுகத்திற்கே அவமானமாகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு கடனுதவிகள், நலத்திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் செய்து முன்னேற வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்காதீர்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை