உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி, விவசாயிகளுக்கு அறிவுரை

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி, விவசாயிகளுக்கு அறிவுரை

விழுப்புரம்: கோலியனுார் வட்டார விவசாயிகள், நெற்பயிரில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா விவசாயிகளுக்கு, அறிவுறுத்தியுள்ளார்.கோலியனுார் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 10,000 ஏக்கர் பரப்பளவு நெல் பயிரிடப்பட்டுள்ளது. வட்டாரம் முழுவதும் நெற்பயிர் நடவு பருவத்திலிருந்து கதிர் விடும் பருவம் வரை பரவலாக காணப்படுகிறது.கோலியனுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா தலைமையில் அலுவலர்கள், வயலாய்வு செய்தனர். ஆய்வின் போது, ஆனாங்கூர், பில்லுார் பகுதிகளில் நெற்பயிரில் இலை சுருட்டுபுழு மற்றும் பாக்டீரியல் இலை கருகல் நோயின் தாக்கம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.இதையடுத்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா கூறியதாவது;நெற்பயிரில் இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசாடராக்டின் 400 மி.லி., புளுபென்டியமைடு டபள்யு.ஜி.50 கிராம், குளோரன்ட்ரலிபுரோல் எஸ்சி 60 மி.லி., பிப்ரோனில் 300-400 மி.லி., தயோமீத்தாக்சாம் டபள்யுஜி 40 கிராம், கார்டாப் ைஹட்ரோகுளாரைடு எஸ்பி 400 கிராம், இன்டோக்சாகர்ப் இசி 80 மி.லி., ஆகிய பூச்சி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒருமுறை பயன்படுத்த வேண்டும். இதில், மீண்டும் தாக்குதல் தொடர்ந்தால் 15 நாட்கள் இடைவெளியில் மற்றொரு மருந்தை மறுபடியும் பயன்படுத்திட வேண்டும் என விவசாயிகளுக்கு, அறிவுறுத்தினார்.பாக்டீரியல் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்சிகுளோரைடு 125 கிராம், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் SP 300 கிராம், காப்பர் ஆக்ஸிகுளோரைடு எஸ்.பி., 1.25 கிலோ என்ற அளவில் தெளித்து நோய் தொடர்ந்து பரவிடாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை